உயிர் கொடுப்பதினால் கடவுள் என்றால்,
எனக்கு உயிர் கொடுத்த நீ கடவுள் ஆவாய்.


பல மாதங்கள் கருவில் சுமந்தாய்,
அதன் பின் உன் மனதில் சுமந்தாய்.

பாரம் என எண்ணாமல் பல தியாகங்கள் செய்தாய்,
பல கஷ்டங்கள் தாங்கி என்னை தலை நிமிர செய்தாய்.


உன் பாசத்தை மிஞ்ச இவ்வுலகில் வேறெதுவும் உண்டோ?
உன் ஆலோசனைகளை மிஞ்சும் பாடம் எதும் உண்டோ?


வேறொரு ஜென்மம் உண்டெனில் பிறக்க வேண்டும் உன் பிள்ளையாக,
மீண்டும் உன் கைகளில் தவிழும் வாய்ப்பை கேட்பேன் வரமாக.


இப்படிக்கு,
உன் என்றும் மாறா மகன்,
ஜெரி